தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு செலுத்தியதாக வரும் குறுந்தகவல்- சான்றிதழால் குழப்பம்


தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு செலுத்தியதாக வரும் குறுந்தகவல்- சான்றிதழால் குழப்பம்
x

கொரோனா பரவலை தடுக்க முக்கிய காரணமாக அமைந்தது தடுப்பூசிதான். எனவே கொரோனா தடுப்பூசி போடுவதை ஊக்குவித்து, தகுதி உள்ள அனைவரும் அனைத்து தவணைகளையும் போட்டுக்கொள்ள அரசு அறிவுறுத்தி உள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

கொரோனா பரவலை தடுக்க முக்கிய காரணமாக அமைந்தது தடுப்பூசிதான். எனவே கொரோனா தடுப்பூசி போடுவதை ஊக்குவித்து, தகுதி உள்ள அனைவரும் அனைத்து தவணைகளையும் போட்டுக்கொள்ள அரசு அறிவுறுத்தி உள்ளது.

தடுப்பூசி சான்றிதழ்

தடுப்பூசி போடுபவர்களுக்கு அதற்கான குறுந்தகவலும் அதன்பின்னர் சான்றிதழும் முழுவிவரங்களுடன் அனுப்பப்பட்டு வந்தது. இந்த சான்றிதழை மக்கள் பதிவிறக்கம் செய்துதங்களின் தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் சில நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று வேகமெடுக்க தொடங்கி உள்ளது. இதன்காரணமாக முககவசம் அணிவதை கட்டாயமாக்கியதோடு தடுப்பூசி செலுத்தாதவர்களை, செலுத்த வைக்க அரசு நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளது. பலர் தங்களுக்கான 2-வது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகளை போடாமல் உள்ளனர்.

இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலருக்கு தடுப்பூசி போடாமலேயே போட்டதாக குறுந்தகவலும் அதனை தொடர்ந்து அதற்கான சான்றிதழும் வந்த வண்ணம் உள்ளது. கடந்த காலங்களில் இதுபோன்று குறுந்தகவல் வந்தால், தொலைபேசி எண் தவறு என்று காரணம் சொல்லப்பட்டு வந்தது.

சான்றிதழ்

தற்போது குறுந்தகவலோடு சான்றிதழும் குறிப்பாக எந்த தவணை தடுப்பூசி மற்றும் ஏற்கனவே போட்ட தடுப்பூசி மையத்தில் தற்போது அடுத்த தடுப்பூசி வெற்றிகரமாக போட்டுக்கொண்டதாகவும் தெளிவாக சான்றிதழ் வந்தவண்ணம் உள்ளதுதான் குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தடுப்பூசி போடாமலேயே ஊசி போட்டதாக சான்று வருவதால் சம்பந்தபட்டவர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். இதுபோன்று சான்றிதழ் வந்துவிட்டதால் அவர்கள் தங்களுக்கான அடுத்த தவணை ஊசியை போட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே, இதுகுறித்து விசாரணை நடத்தி, போலியாக அனுப்பப்படும் கொரோனா தடுப்பூசி சான்றுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story