நாய்கள் கடித்து புள்ளிமான் காயம்
நாய்கள் கடித்து புள்ளிமான் காயம் அடைந்தது.
ராமநாதபுரம்
பரமக்குடி,
பரமக்குடி அருகே உள்ள சுந்தனேந்தல், தெளிச்சாத்தநல்லூர், மஞ்சள்பட்டினம் ஆகிய வனப்பகுதிகளில் ஏராளமான மான்கள் உள்ளன. நேற்று மாலை குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீர் குடிக்க வந்த புள்ளி மானை தெரு நாய்கள் விரட்டி கடித்தன. இதில் புள்ளி மான் காயம் அடைந்தது. அதை பார்த்த அப்பகுதி மக்கள் நாய்களை விரட்டி அடித்து காயங்களுடன் இருந்த புள்ளி மானை மீட்டனர். பின்பு அப்பகுதி மக்கள் நகர்மன்ற உறுப்பினர் பாக்கியத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவரது ஏற்பாட்டில் அந்த புள்ளி மானை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் வனத்துறை அதிகாரிகளிடம் மானை ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story