விபத்தில் படுகாயம் அடைந்துஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற கடை உரிமையாளர் சாவு


விபத்தில் படுகாயம் அடைந்துஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற கடை உரிமையாளர் சாவு
x

விபத்தில் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற கடை உரிமையாளர் இறந்தாா்

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி மறைமலை அடிகள் வீதியை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 33). இறைச்சி கடை உரிமையாளர். சம்பவத்தன்று இரவு இவர் புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற தனியார் பஸ், எதிர்பாராதவிதமாக மோகன்குமார் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மோகன்குமார் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story