விபத்தில் காயமடைந்த தி.மு.க. நிர்வாகி பலி


விபத்தில் காயமடைந்த தி.மு.க. நிர்வாகி பலி
x

தஞ்சை அருகே முதல்- அமைச்சர் வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று விபத்தில் காயமடைந்த தி.மு.க. நிர்வாகி உயிரிழந்தார்.

தஞ்சாவூர்

வல்லம்;

தஞ்சை அருகே முதல்- அமைச்சர் வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று விபத்தில் காயமடைந்த தி.மு.க. நிர்வாகி உயிரிழந்தார்.

வரவேற்பு நிகழ்ச்சி

தஞ்சை அருகே உள்ள வல்லம் பேரூராட்சி 12-வது வார்டு முன்னாள் தி.மு.க. செயலாளர் ஷாகுல்ஹமீது(வயது55). இவரும் வல்லம் நகர தி.மு.க. பொருளாளர் யூசுப்பும் சம்பவத்தன்று தஞ்சைக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வல்லத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றனர்.வல்லம் - திருச்சி பிரிவு சாலையில் இவா்கள் சென்ற போது வல்லம் டி.கே.எஸ். நகரை சேர்ந்த ராசு என்பவர் சாலையை கடந்தார். அப்போது அவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

பரிதாப சாவு

இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த யூசுப், பின்னால் உட்கார்ந்திருந்த ஷாகுல்ஹமீது , ராசு உள்பட 3 பேரும் சாலையில் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தினர். அங்கு சிகிச்சை பலனின்றி ஷாகுல்ஹமீது நேற்று காலை உயிரிழந்தார்.இது குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story