ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேற்கூரை ஓடு விழுந்து மாணவி காயம்
தர்மபுரி
மாரண்டஅள்ளி:
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள சிக்க மாரண்டஅள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 3-ம் வகுப்பு மாணவி ரோஷினி (வயது 8) நேற்று மதியம் வகுப்பறை வராண்டாவில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார்.
அப்போது வராண்டா மேற்கூரை ஓடு மாணவியின் தலை மீது விழுந்தது. இதில் மாணவிக்கு காயம் ஏற்பட்டது. மாணவியை மீட்டு மாரண்டஅள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேற்கூரையில் இருந்து ஓடு விழுந்து மாணவி காயம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story