மோட்டார் சைக்கிள்கள் மோதல்; கணவன்- மனைவி படுகாயம்


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; கணவன்- மனைவி படுகாயம்
x
தினத்தந்தி 6 Sept 2023 1:00 AM IST (Updated: 6 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

காரிமங்கலம்:

காரிமங்கலத்தை அடுத்த சொன்னம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது23). இவருடைய மனைவி திவ்யாஸ்ரீ (21). இருவரும் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். சென்னையில் இருந்து சொந்த ஊர் வருவதற்காக மோட்டார் சைக்கிளில் விஸ்வநாதன் தனது மனைவியை பின்னால் உட்கார வைத்துக் கொண்டு சிருஷ்ணகிரி - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் தர்மபுரி நோக்கி வந்து கொண்டிருந்தார். காரிமங்கலம் அருகே வந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், விஸ்வநாதன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. விஸ்வநாதன், அவருடைய மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story