விவசாயிகளுக்கு இடுபொருட்கள்


விவசாயிகளுக்கு இடுபொருட்கள்
x
தினத்தந்தி 26 July 2023 12:15 AM IST (Updated: 26 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குறுவை தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள்; பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.வழங்கினார்

மயிலாடுதுறை

திருவெண்காடு:

சீர்காழி அருகே நாங்கூரில் வேளாண்மை துறை சார்பில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு யூரியா, பொட்டாஷ், டி.ஏ.பி. ஆகியவை அடங்கிய தொகுப்பு பொருட்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு சீர்காழி வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் தலைமை தாங்கினார். சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வேளாண்மை அலுவலர் ரவிச்சந்திரன் வரவேற்றார். இதில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு அடங்கிய இடுபொருட்களை வழங்கினார். தொடர்ந்து பொம்மலாட்ட கலை நிகழ்ச்சி மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் மத்திய அரசு சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கான இலவச தள்ளுவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகர சபை தலைவர் துர்கா ராஜசேகரன் தலைமை தாங்கினார். ஆணையர் (பொறுப்பு) ஹேமலதா, துணைத்தலைவர் சுப்பராயன், பொறியாளர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர அமைப்பு ஆய்வாளர் மரகதம் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு சாலையோர வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டிகளை வழங்கினார்.


Next Story