குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள்


குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில்  விவசாயிகளுக்கு இடுபொருட்கள்
x
தினத்தந்தி 19 July 2023 12:15 AM IST (Updated: 19 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொறையாறு அருகே குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு இடுபொருட்களை நிவேதா முருகன் எம்.எல்.ஏ. வழங்கினார்

மயிலாடுதுறை

பொறையாறு:

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்களாச்சேரி ஊராட்சியில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு இடுப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சேகர் தலைமை தாங்கினார்.வேளாண்மை உதவி இயக்குநர் சுப்பையா வேளாண்மை அலுவலர் உமா பசுபதி முன்னிலை வகித்தனர். உதவி வேளாண்மை அலுவலர் ரவிச்சந்திரன் வரவேற்றார். இதில் நிவேதா எம்.முருகன், எம்.எல்.ஏ. கலந்து கொண்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாய உரங்கள், நெல் விதைகள் மற்றும் விவசாய கருவிகள் உள்ளிட்ட இடுபொருட்களை வழங்கினார். இதில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், தஞ்சை மண்டல தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், முன்னாள் எம்.எல்.ஏ. சித்திக், ஒன்றிய செயலாளர்கள் அப்துல் மாலிக், அமுர்த விஜயகுமார், , ஊராட்சி மன்ற தலைவர் பைலட் மற்றும் வேளாண் அலுவலர்கள்,விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story