குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இடுபொருட்கள்


குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இடுபொருட்கள்
x

குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இடுபொருட்கள்

திருவாரூர்

திருவாரூர் அருகே குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இடுபொருட்களை பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

குறுவை தொகுப்பு திட்ட தொடக்க விழா

திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் குறுவை தொகுப்பு திட்ட மாவட்ட அளவிலான தொடக்க விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் தலைமை தாங்கினார். இதில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இடு பொருட்களை வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சுதந்திரத்திற்கு பிறகு வரலாற்றில் முதல் முறையாக கடந்த மே மாதம் 24-ந்தேதி மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 62 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேவையான உரங்கள்

விவசாயிகள் பயன் பெறும் வகையில் ரூ.13 கோடியே 57 லட்சம் மதிப்பில் குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சாகுபடிக்கு தேவையான உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் வேளாண்மை இணை இயக்குனர் ரவீந்திரன், ஒன்றியக்குழு தலைவர் புலிவலம் தேவா, கூட்டுறவு சங்க தலைவர் பாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர் கஸ்தூரி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேளாண்மை உதவி இயக்குனர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா நன்றி கூறினார்.


Next Story