பகுதி நேர ரேஷன் கடை திறக்க வலியுறுத்தி பெண்கள் ஆர்ப்பாட்டம்
திருத்துறைப்பூண்டி அருகே பகுதி நேர ரேஷன் கடை திறக்க வலியுறுத்தி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்்.
கோட்டூர்:
திருத்துறைப்பூண்டி அருகே பகுதி நேர ரேஷன் கடை திறக்க வலியுறுத்தி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்்.
ரேஷன் கடை
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் பூசலாங்குடி ஊராட்சியை சேர்ந்த சிதம்பரக் கோட்டகம், அகரவயல், .தூத்தடிமூலை, ஆகிய கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டதாரர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் அரிசி, மண்எண்ணெய், சீனி போன்ற அத்தியாவசிய பொருட்கள் வாங்க 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ராயநல்லூர் மற்றும் பூசலாங்குடி ரேஷன் கடைக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இந்தநிலையில் திருத்துறைப்பூண்டி அருகே பகுதி நேர ரேஷன் கடை திறக்க வலியுறுத்தி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆட்டோ பிடித்து
இது குறித்து ஊராட்சி துணைத் தலைவர் செந்தில்குமார் கூறியதாவது:-
எங்கள் பகுதி போக்குவரத்து வசதி இல்லாத கிராமம் ஆகும். ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் 3 கிலோமீட்டர் தூரம் நடந்து தான் செல்ல வேண்டும். வாகன வசதி இல்லாதவர்கள் முதியவர்கள் இதனால் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள். ரேஷன் பொருள் வாங்க வேண்டும் என்றால் ஒரு நாள் முழுவதும் வேலை இழந்து காத்துக் கிடந்துதான் வாங்க வேண்டிய நிலை உள்ளது. சிலர் வாடகை ஆட்டோ பிடித்து பொருட்களை ஏற்றி வருகிறார்கள். இதனால் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. மழை காலங்களில் இதுவும் கிடைக்காமல் போய்விடுகிறது.
சாலை மறியல்
மூன்று கிராமங்களைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் சிதம்பரம் கோட்டத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மனு கொடுத்து வாடகை கட்டிடத்தில் அமைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. ஆனால் திடீரென அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது. எனவே அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க இந்த போராட்டம் நடைபெற்றது. சிதம்பரம் கோட்டகம் கிராமத்தில் பகுதி ரேஷன் கடை திறக்க வேண்டும். தவறும் பட்சத்தில் கிராம பொதுமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ராயநல்லூர் கடைவீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.