சாலையை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


சாலையை சீரமைக்க வலியுறுத்தி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-25T00:15:13+05:30)

தேனி அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

தேனி அருகே வாழையாத்துப்பட்டி விலக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி-பூதிப்புரம் சாலையை சீரமைக்க வேண்டும். பூதிப்புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கழிப்பிட வசதி செய்து கொடுக்க வேண்டும். திண்டுக்கல்-குமுளி புறவழிச்சாலையில் பூதிப்புரத்தை சுற்றியுள்ள 6 கிராம மக்களின் பயன்பாட்டுக்கு இணைப்புச் சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கிளை செயலாளர் பொன்னுத்துரை தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் முனீஸ்வரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். தாலுகா செயலாளர் தர்மர், மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயபாண்டி, கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story