கூட்டுறவு வங்கிகளில் பாலியல் புகார் கமிட்டி அமைக்க வலியுறுத்தல்


கூட்டுறவு வங்கிகளில் பாலியல் புகார் கமிட்டி அமைக்க வலியுறுத்தல்
x

கூட்டுறவு வங்கிகளில் பாலியல் புகார் கமிட்டி அமைக்க வலியுறுத்தப்பட்டது.

திருச்சி

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மகளிர் மாநில மாநாடு திருச்சியில் நேற்று நடந்தது. மாநாட்டிற்கு அன்புசெல்வி தலைமை தாங்கினார். சம்மேளன மாநில தலைவர் தமிழரசு மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி சிறப்புரையாற்றினார். மாநாட்டில், 'நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றிட வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் பாலியல் வன்முறை தடுப்பு சட்டம் 2013-ன் படி பாலியல் புகார் கமிட்டி அமைத்திட வேண்டும். மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து கேரளாவைப் போல் தமிழ்நாடு வங்கி உருவாக்கிட வேண்டும்' என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story