சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்


சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்
x

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர்:

தமிழ்நாடு ஊராளிக் கவுண்டர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழ்நாடு ஊராளிக் கவுண்டர் இளைஞர் பேரவை நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்நாடு ஊராளிக் கவுண்டர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் தர்மராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தகுந்தவாறு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஒரு சமூகத்திற்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிராக தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் ஆணையை நடைமுறைப்படுத்த வேண்டும். சாதிவாரி சமூக கல்வி நிலைகள், பிரதிநிதித்துவம், வேலை வாய்ப்புகள் குறித்து புள்ளி விவர வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். புள்ளி விவர அடிப்படையில் சமூக நீதி அறிஞர்களை கொண்ட குழு அமைத்து சட்டப்படியான வகுப்புவாரி தொகுப்பு இட ஒதுக்கீட்டு முறையை செயல்படுத்த வேண்டும். மத்திய அரசு ரோகிணி கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசு நீட் தேர்வு இல்லாமல் மருத்துவக்கல்விக்கு மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எம்.பி.சி, டி.என்.டி., பி.சி. சமூகங்களின் சமூக நீதி கூட்டமைப்பின் கோரிக்கை விளக்க கூட்டத்தை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பெரம்பலூா் பாலக்கரை-கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் சங்கங்களின் சார்பில் நடத்தவும், அதன்பிறகு அந்த கோரிக்கை மனுவினை கலெக்டரிடம் வழங்கவுள்ளதாகவும் முடிவு செய்யப்பட்டது.

1 More update

Next Story