பள்ளி, கல்லூரி நேரத்தில் போதிய பஸ்களை இயக்க வலியுறுத்தல்


பள்ளி, கல்லூரி நேரத்தில் போதிய பஸ்களை இயக்க வலியுறுத்தல்
x

பள்ளி, கல்லூரி நேரத்தில் போதிய பஸ்களை இயக்க வலியுறுத்தப்பட்டுள்ளது-

பெரம்பலூர்

பெரம்பலூரில், மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தின் 6-வது மாநாடு நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் மோகன், முன்னாள் மாநில நிர்வாகி டாக்டர் கருணாகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில துணைத் தலைவர் கண்ணன் நிறைவுரையாற்றினார். தனியார் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் கட்டண உயர்வை மத்திய-மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். மாணவ-மாணவிகள், பயணிகள் வசதிக்காக பள்ளி, கல்லூரி நேரத்தில் போதிய பஸ்களை இயக்க வேண்டும். பெரம்பலூரில் தொழிற்சாலை அமைத்து வேலைவாய்ப்பினை வழங்கிட வேண்டும். பெரம்பலூர் அரசு வேளாண் மற்றும் மருத்துவக்கல்லூரிகளை தொடங்கிட வேண்டும். வருகிற 25, 26, 27-ந் தேதிகளில் திருவாரூரில் நடைபெறவுள்ள சங்கத்தின் 26-வது மாநில மாநாட்டில் மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


Next Story