முப்படை வீரர்களுக்கு தனி மருத்துவமனை அமைக்க வலியுறுத்தல்


முப்படை வீரர்களுக்கு தனி மருத்துவமனை அமைக்க வலியுறுத்தல்
x

முப்படை வீரர்களுக்கு தனி மருத்துவமனை அமைக்க வலியுறுத்தப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்ட முன்னாள் முப்படை வீரர்கள் நலச்சங்கம் சார்பில் சிறப்புக்கூட்டம் தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. ஒன்றிய பொருளாளர் சிவசாமி வரவேற்று பேசினார். ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் ஜான் கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றிய தலைவர்கள் திருமானூர் மூர்த்தி, ஜெயங்கொண்டம் பாஸ்கர், அரியலூர் ரங்கராஜ், செயலாளர்கள் திருமானூர் நடராஜன், ஜெயங்கொண்டம் குருநாதன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் முப்படை வீரர்கள், முன்னாள் வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்டோர் பயனடையும் வகையில் தனி மருத்துவமனை அமைக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் படைவீரர்கள் கேண்டீன் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னாள் முப்படை வீரர்கள் நலச்சங்கத்தின் சார்பில் 50-க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


Next Story