இரும்புலி கிராமத்தில் நாடக மேடை அமைக்க வலியுறுத்தல்


இரும்புலி கிராமத்தில் நாடக மேடை அமைக்க  வலியுறுத்தல்
x

இரும்புலி கிராமத்தில் நாடக மேடை அமைக்க வேண்டும் என தெள்ளார் ஒன்றிய குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருவண்ணாமலை

வந்தவாசி

இரும்புலி கிராமத்தில் நாடக மேடை அமைக்க வேண்டும் என தெள்ளார் ஒன்றிய குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வந்தவாசியை அடுத்த தெள்ளார் ஒன்றியக்குழுவின் சாதாரணக் கூட்டம் தெள்ளார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தெள்ளார் ஒன்றியக்குழுத் தலைவர் கமலாட்சி இளங்கோவன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஏ.பி.வெங்கடேசன், எல்.சீனிவாசன், துணைத்தலைவர் விஜயலட்சுமி தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பங்கேற்ற ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றக் கோரி பேசினர். ''கூடலூர் கிராமத்தில் உள்ள முஸ்லிம் சுடுகாட்டுக்கு இணைப்பு சாலை ஏற்படுத்த வேண்டும், இரும்புலி கிராமத்தில் நாடக மேடை அமைக்க வேண்டும்'' என்று உறுப்பினர் தீபா வெங்கடேசன் பேசினார். ''தெள்ளார் ஒன்றியத்தில் நிதிப் பற்றாக்குறை நிலவுவதால் இதுகுறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும்'' என்று ஒன்றியக்குழு உறுப்பினர் தசரதன் பேசினார். இவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

பின்னர், பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவது தொடர்பான தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


Next Story