கல்லாற்றின் குறுக்கே சின்னமுட்டுலு நீர்த்தேக்கம் கட்டும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்


கல்லாற்றின் குறுக்கே சின்னமுட்டுலு நீர்த்தேக்கம் கட்டும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்
x

கல்லாற்றின் குறுக்கே சின்னமுட்டுலு நீர்த்தேக்கம் கட்டும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூரில் மக்கள் சக்தி இயக்கத்தின் கூட்டம் மாநில துணைத்தலைவரும், தமிழ்ச்செம்மல் விருதுபெற்ற முன்னாள் ராணுவ அலுவலருமான பெரியசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் வெங்கடாசலம், மாநில செயற்குழு உறுப்பினர் சித்தமருத்துவர் கோசிபா, மாவட்ட நிர்வாகிகள் செங்கோட்டையன், ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில் பெரம்பலூர் மாவட்டத்தின் வழியே புதிதாக ரெயில்பாதை அமைத்து ரெயில்கள் விட வேண்டும். பெரம்பலூர் மாவட்டம் மலையாளப்பட்டி அருகே பச்சை மலையில் கல்லாற்றின் குறுக்கே சின்னமுட்டுலு நீர்த்தேக்கம் கட்டும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பெரம்பலூரில் மேற்கு வானொலித்திடல் அருகே பழைய பழுதடைந்த கட்டிடத்தில் இயங்கும் உள்ள கிளை நூலகத்தை புதுப்பித்து முழுநேர நூலகமாக தரம் உயர்த்திட வேண்டும். மாவட்ட தலைநகரமான பெரம்பலூரில் மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பழைய, புதிய பஸ் நிலையங்கள், தினசரி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் தினந்தோறும் அதிக அளவு கொட்டப்படும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றி சுகாதார சீர்கேடுகளை தடுக்க மாவட்ட கலெக்டர் போர்க்கால அடிப்படையில் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஆலோசகர் வைரமணி நன்றி கூறினார்.


Next Story