கடைகள் கட்டும் பணியை நகராட்சி மண்டல இயக்குனர் நேரில் ஆய்வு


கடைகள் கட்டும் பணியை நகராட்சி மண்டல இயக்குனர் நேரில் ஆய்வு
x

வாணியம்பாடியில் கடைகள் கட்டும் பணியை நகராட்சி மண்டல இயக்குனர் பெ.குபேந்திரன் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் நடந்து வருகிறது. அந்தப் பணிகளை வேலூர் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் பெ.குபேந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அவர், வளையாம்பட்டு பகுதியில் உள்ள குப்பைக் கிடங்குகள் பகுதியிலும், அதே பகுதியில் உள்ள கசடு கழிவுகளை அகற்றும் பணிகளையும், நுண் உர மையத்தையும் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து வாணியம்பாடி வாரச் சந்தை மைதானத்தில் புதிதாக ரூ.4 கோடியே 39 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் 112 மார்க்கெட் கடைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்பிறகு நூருல்லாபேட்டையில் உள்ள நுண் உர மையத்தையும், எம்.சி.சி. மையத்திலுள்ள மக்கும் குப்பை, மக்காத குப்பை பதிவேடுகளை ஆய்வு செய்தார். மேலும் நியூ டவுனில் உள்ள நகராட்சி அலுவலகத்துக்கு வந்து, அங்கு வருவாய்த்துறை பணியாளர்களிடம் வரி நிலுவை தொகை உள்ளதை விரைந்து வசூலிக்கும்படி அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லிபாபு, பொறியாளர் பி.சங்கர், நகராட்சி மேலாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story