ராயக்கோட்டை அருகேசாலை விரிவாக்க பணியை அதிகாரி ஆய்வு
கிருஷ்ணகிரி
ராயக்கோட்டை
ராயக்கோட்டையில் அத்திப்பள்ளி சாலையில் நல்ராலப்பள்ளி முதல் நாகமங்கலம் வரை ரூ.17.50 கோடி மதிப்பில் இரு வழிதடத்தில் இருந்து நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை விரிவாக்க பணியை சேலம் கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார். அப்போது சாலை மற்றும் சிறு பாலங்களின் நீளம், அகலம், ஆழம், மற்றும் சாலையின் சரி மட்ட அளவுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அப்போது கோட்டப்பொறியாளர் சரவணன், உதவி கோட்டப்பொறியாளர் திருமால்செல்வன், ராயக்கோட்டை உதவி பொறியாளர் மன்னர்மன்னன் மற்றும் சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story