சூளகிரியில்நீதிமன்றம் அமைக்கும் இடத்தை முதன்மை நீதிபதி ஆய்வு
கிருஷ்ணகிரி
ஓசூர்
சூளகிரி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள், தொலைதூரத்தில் இருந்து நீதிமன்றங்களுக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது. மேலும், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் பஸ் நிலையத்தில் இருந்து நீதிமன்றம் சென்று வர போதிய பஸ் வசதி இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர். இதையடுத்து சூளகிரியில் நீதிமன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
சூளகிரி பழைய வட்டார வளர்ச்சி அலுவலக கட்டிடத்தில் நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த இடத்ைத மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமல் ரவிகுமார், பாபி பிரான்சி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மது என்ற ஹேம்நாத், ஓசூர் வக்கீல்கள் சங்க தலைவர் சிவசங்கர் மற்றும் ரியாசுத்தீன், விஜயராகவன் உள்ளிட்ட வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story