சுதந்திர தினத்தை முன்னிட்டுபாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை


சுதந்திர தினத்தை முன்னிட்டுபாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை
x
தினத்தந்தி 14 Aug 2023 1:00 AM IST (Updated: 14 Aug 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

பாதுகாப்பு நடவடிக்கை

இந்திய நாட்டின் 76-வது சுதந்திர தின விழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி, தொப்பூர், பாலக்கோடு, மொரப்பூர், பொம்மிடி, புட்டிரெட்டிப்பட்டி உள்ளிட்ட அனைத்து ரெயில் நிலையங்களிலும் ரெயில்வே போலீசார் தண்டவாளங்கள், பயணிகள் தங்கும் அறை, டிக்கெட் முன்பதிவு மையம், நடை மேடைகள், வாகனம் நிறுத்தும் இடம் ஆகிய இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்தந்த நிலையங்களுக்கு வரும் ரெயில்களிலிலும் போலீசார் தீவிர சோதனை செய்தனர். பயணிகள் வைத்திருக்கும் பைகளையும் அவர்கள் சோதனை நடத்தினர்.

உடமைகள் சோதனை

தர்மபுரி ரெயில் நிலையத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கோதண்டபாணி, கிரி மற்றும் போலீசார் ரெயில்களில் சோதனை செய்தனர். பின்னர். பயணிகள் காத்திருப்பு அறை, தண்டவாளங்கள், வாகனம் நிறுத்தும் இடத்தில் இருந்த இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றையும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். தொடர்ந்து அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் மற்றும் பொதுமக்களின் உடைமைகள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது.


Next Story