கடத்தூரில் ஓட்டல்கள், கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் திடீர் ஆய்வு: இறைச்சி, காலாவதியான பொருட்கள் பறிமுதல்


கடத்தூரில் ஓட்டல்கள், கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் திடீர் ஆய்வு: இறைச்சி, காலாவதியான பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 31 Aug 2023 1:00 AM IST (Updated: 31 Aug 2023 6:10 PM IST)
t-max-icont-min-icon

செயற்கை நிறம் ஏற்றப்பட்ட இறைச்சி மற்றும் குளிர்ப்பதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சமைத்த இறைச்சி 5 கிலோ பறிமுதல் செய்து அழித்தனர்.

தர்மபுரி

மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் கே.நந்தகோபால் மற்றும் குழுவினர் கடத்தூர் மற்றும் சில்லாரஅள்ளி, புளியம்பட்டி, நத்தமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்கள், மளிகை கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.

அப்போது 2 கடைகளில் இருந்துசெயற்கை நிறம் ஏற்றப்பட்ட இறைச்சி மற்றும் குளிர்ப்பதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சமைத்த இறைச்சி 5 கிலோ பறிமுதல் செய்து அழித்தனர்.2 ஓட்டல்களில் இருந்து உரிய விபரங்கள் அச்சிடாத மசாலா பாக்கெட்டுகள் 2 கிலோ, பலமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் 2 லிட்டர் மற்றும் செயற்கை நிறமூட்டி பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த கடை, ஓட்டல்களுக்கு தலா 1,000 வீதம் அபராதம் விதித்தனர். தொடர்ந்து நத்தமேடு பகுதிகளில் 3 கடைகளில் காலாவதியாக பொருட்களை பறிமுதல் செய்தனர்.


Next Story