சேலம் சிவதாபுரத்தில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிஅருள் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு


சேலம் சிவதாபுரத்தில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிஅருள் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு
x

சேலம் சிவதாபுரத்தில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை அருள் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு செய்தார்.

சேலம்

சூரமங்கலம்

சேலம் மேற்கு தொகுதிக்குட்பட்ட 22-வது வார்டு, சிவதாபுரத்தில் மழை காலங்களில் சேலத்தான்பட்டி ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் மற்றும் மழைநீர் தேங்காமல் வெளியேற்றும் வகையில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சித்தர் கோவில் மெயின் ரோட்டில் நடைபெற்று வரும் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனால் சாக்கடை கால்வாய் அருகில் உள்ள வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதனால் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அருள் எம்.எல்.ஏ. நேரில் சென்று சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். ஆய்வின் போது மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜயகுமார், மாவட்ட துணைச் செயலாளர் சேகர், பகுதி செயலாளர் சமயவேல், மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர் அருண், வார்டு செயலாளர் குமார், தலைவர் சுரேஷ், பகுதி அமைப்பு செயலாளர் கோவிந்தன், மாணவரணி சஞ்சய், ஸ்ரீகாந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story