திருச்செங்கோடு அருகே சாலை பணியை அதிகாரிகள் ஆய்வு


திருச்செங்கோடு அருகே  சாலை பணியை அதிகாரிகள் ஆய்வு
x

திருச்செங்கோடு அருகே சாலை பணியை அதிகாரிகள் ஆய்வு

நாமக்கல்

எலச்சிபாளையம்:

நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் திருச்செங்கோடு உட்கோட்டத்தை சேர்ந்த கிளாப்பாளையம் கிராமத்தில் சாலை பணியினை சேலம் தேசிய நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் சரவணன் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த குழுவினர் தார் கலவை, பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் ஆகியவை குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் ஆய்வு அறிக்கையை சென்னை நெடுஞ்சாலை துறை முதன்மை இயக்குனருக்கு அனுப்பி வைத்தனர். இந்த ஆய்வின்போது சேலம் தேசிய நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர் நடராஜன், நாமக்கல் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின் கோட்டபொறியாளர் சந்திரசேகர், உதவி கோட்ட பொறியாளர் தமிழரசி மற்றும் உதவி பொறியாளர் சுதா ஆகியோர் உடன் இருந்தனர்.

1 More update

Next Story