260 பள்ளி வாகனங்கள் ஆய்வு


260 பள்ளி வாகனங்கள் ஆய்வு
x

பாலக்கோட்டில் 260 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு, காரிமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் 38 தனியார் பள்ளிகளின் 260 வாகனங்கள் பாலக்கோட்டில் ஆய்வு செய்யப்பட்டது. மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி வாகனங்களை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் பள்ளி வாகனங்களில் அவசர கால வழி, கண்காணிப்பு கேமரா மற்றும் ஜி.பி.எஸ். கருவி, தீயணைப்பு கருவி, முதலுதவி பெட்டி, வாகனத்தின் தரைதளம் ஆகியவை சரியாக உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் தீயணைப்பு கருவியை பயன்படுத்துவது குறித்து டிரைவர்களுக்கு தீயணைப்புத்துறையினர் மூலம் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் வாகனங்களில் தீப்பிடித்தால் எவ்வாறு அணைப்பது குறித்தும், ஹேன்ட் பிரேக்கின் பயன்பாடு குறித்தும், வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்தும் விளக்கி கூறினர்.

இந்த ஆய்விற்கு வராத பள்ளி வாகனங்கள் பொதுச்சாலையில் இயக்குவது கண்டறியப்பட்டால் வாகனம் சிறைப்பிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது குறைபாடுகளுடைய 12 வாகனங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் குறைகளை நிவர்த்தி செய்து ஒரு வார காலத்திற்குள் மீண்டும் ஆய்விற்குட்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.


Next Story