ரூ.48.35 லட்சத்தில் 100 வீடுகள் பழுதுபார்க்கும் பணி


ரூ.48.35 லட்சத்தில் 100 வீடுகள் பழுதுபார்க்கும் பணி
x

பாளையம் சமத்துவபுரத்தில் உள்ள 100 வீடுகள் ரூ.48.35 லட்சம் மதிப்பீட்டில் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தர்மபுரி

பாளையம் சமத்துவபுரத்தில் உள்ள 100 வீடுகள் ரூ.48.35 லட்சம் மதிப்பீட்டில் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சமத்துவபுரம் வீடுகள்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் பாளையம்புதூர் ஊராட்சி பாளையம் சமத்துவபுரத்தில் உள்ள 100 வீடுகள் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.48.35 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பராமரிப்பு மற்றும் பழுது பார்க்கும் பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள். இந்த பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.இதனைத் தொடர்ந்து அதியமான்கோட்டை ஊராட்சி முண்டாசு புறவடை பகுதியில் 5 திருநங்கைகளுக்கு முதல்-அமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு 3 பசுமை வீடுகள் தலா ரூ.2.10 லட்சம் வீதம் ரூ.6.30 லட்சம் மதிப்பீட்டியில் பசுமை வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கண்காணிக்க வேண்டும்

விநாயகர் சிலைகள் செய்யும் வைக்கும் இடங்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, உதவி திட்ட அலுவலர் உஷாராணி, பசுமை வீடுகள் வட்டார வளர்ச்சி அலுவலர் தண்டபானி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சகிலா, கவுரி, உதவி பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சேத்தாஜ், பாளையம்புதூர் ஊராட்சி தலைவர் சுப்பிரமணியம் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story