ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு
பாலக்கோடு பகுதியில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
தர்மபுரி
பாலக்கோடு:
தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பானுசுஜாதா தலைமையில் அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர் பாலக்கோடு பஸ் நிலையம், எம்.ஜி.ரோடு, தர்மபுரி ரோடு, பைபாஸ் சாலை, தக்காளி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் ஆய்வு செய்தனர். அப்போது 2 கடைகளில் மைதாவினால் பிசைந்து சுகாதாரமற்ற நிலையில் வைத்திருந்த 10 கிலோ பரோட்டா மாவு மற்றும் சுகாதாதரமற்ற முறையில் வைத்திருந்த 8 கிலோ மைதா ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் ஒரு ஓட்டலில் செயற்கை நிறமேற்றி மசாலா தடவி வைத்திருந்த 4 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர். சில உணவகங்களில் நெகிழிகள், செயற்கை நிறமேற்றிய பவுடர் டப்பாக்களை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story