சத்துணவு தரம் குறித்து எம்.எல்.ஏ. ஆய்வு


சத்துணவு தரம் குறித்து எம்.எல்.ஏ. ஆய்வு
x

நல்லம்பள்ளி அரசு பள்ளியில் சத்துணவு தரம் குறித்து வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம் குறித்து வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, சத்துணவு கூடம் அருகே சுகாதாரமற்ற முறையில் கழிவுநீர் தேங்கி நின்றது தெரியவந்தது. பின்னர் சத்துணவு கூடம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களை தூய்மையாக வைக்க வேண்டும். பாதுகாப்பான முறையில் மாணவ-மாணவிகளுக்கு உணவு சமைத்து வழங்க வேண்டும் என்று சத்துணவு பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது தலைமை ஆசிரியர் தங்கவேல், ஒன்றிய கவுன்சிலர் முருகன், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.


Next Story