ஏரிகளில் அதிகாரிகள் ஆய்வு

ஏரிகளில் அதிகாரிகள் ஆய்வு
நாமக்கல்
எருமப்பட்டி:
கொல்லிமலையில் கடந்த 2 நாட்களில் பெய்த கனமழை காரணமாக அடிவாரத்தில் உள்ள புதுக்குளம், பாப்பான்குளம் ஏரிகள் நிரம்பியதால் பழையபாளையம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதை தொடர்ந்து சிவநாய்க்கன்பட்டி ஏரி நிறைந்து தூசூர் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் தூசூர் ஏரியும் நிரம்பி அரூர் ஏரிக்கு தண்ணீர் சென்றது. சில நாட்களில் அரூர் ஏரியும் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தூசூர், பழையபாளையம், அரூர் ஏரிகளில் உள்ள மதகுகள் மற்றும் கடை கால்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ராஜாராம், யுவராஜ், சேந்தமங்கலம் தாசில்தார் செந்தில்குமார், துணை தாசில்தார் பாரதிராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story