மலை கிராமங்களுக்கு பஸ்கள் இயக்க அலுவலர்களுடன் எம்.எல்.ஏ. ஆய்வு
தேன்கனிக்கோட்டை அருகே மலை கிராமங்களுக்கு பஸ்கள் இயக்க அலுவலர்களுடன் சென்று ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கொடகரை கிராம மக்கள் சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் சென்று வந்தனர். இதையடுத்து தேன்கனிக்கோட்டையில் இருந்து கொடகரை மலை கிராமத்திற்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இதையடுத்து கொடகரை மலை கிராமத்திற்கு பஸ்கள் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் போக்குவரத்து கழக அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இதேபோல், தொட்டமஞ்சி மலை கிராமத்தில் இருந்து பெல்லட்டி கிராமம் வரை பஸ் இயக்குவது குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் உறுதியளித்தனர். இந்த ஆய்வின் போது ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலர் துரைசாமி, நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் திருமால்செல்வன், தளி வட்டார வளர்ச்சி அலுவலர் நாகரத்தினம், வனச்சரக அலுவலர்கள் சீத்தாராமன், விஜய், அரசு போக்குவரத்து கழகம் (வணிகம்) துணை மேலாளர் மோகன்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.