கடைகளில் சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆய்வு


தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டையில் கடைகளில் சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகள், மளிகை கடைகளில் சுகாதாரத்துறை அலுவலர்கள் திடீரென சோதனை செய்தனர். அப்போது கடைகளில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் புகையிலை பற்றிய விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன. கடைகளில் இருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சேகர், சுகாதார மேற்பார்வையாளர் சிவகுருநாதன், கார்த்திக், துப்புரவு ஆய்வாளர் நடேசன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ராமச்சந்திரன், சந்தோஷ்குமார் களப்பணியாளர் சீனிவாசன் ஆகியோர் ஈடுபட்டனர்.


Next Story