சாலை, பாலம் கட்டுமான பணிகள் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் ஆய்வு


சாலை, பாலம் கட்டுமான பணிகள் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 8 Jan 2023 12:30 AM IST (Updated: 8 Jan 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் நடைபெற்று வரும் சாலை, பாலம் கட்டுமான பணிகளை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் கோதண்டராமன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தஞ்சாவூர்

கும்பகோணத்தில் நடைபெற்று வரும் சாலை, பாலம் கட்டுமான பணிகளை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் கோதண்டராமன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சாலை பணிகள்

தஞ்சை நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின் கும்பகோணம் உட்கோட்ட பகுதியில் சாலை அமைக்கும் பணி மற்றும் பாலங்கள் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளின் தரம் மற்றும் கட்டுமான வடிவமைப்பு குறித்து நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் கோதண்டராமன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கும்பகோணம் உட்கோட்ட பகுதியில் பி.பி.எம்.சி. திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டை- தாராசுரம் சாலை கட்டுமான பணியின் வடிவமைப்பு, தரம், கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் கட்டுமான நேர்த்தி உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மரக்கன்றுகள்

மேலும் பசுமை சாலையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க அதிகாரிகளுக்கு நிலைய இயக்குனர் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது நெடுஞ்சாலை திருச்சி வட்ட கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி, தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் சிவகுமார், தஞ்சை கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story