நாமக்கல் அருகேபிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு


நாமக்கல் அருகேபிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 23 Feb 2023 7:00 PM GMT (Updated: 23 Feb 2023 7:00 PM GMT)
நாமக்கல்

நாமக்கல் அருகே செல்லப்பம்பட்டியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் கலெக்டர் ஸ்ரேயா சிங் திடீர் ஆய்வு செய்தார்.

மாணவர் விடுதி

நாமக்கல் அருகே செல்லப்பம்பட்டியில் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களுக்காக சமைக்கப்பட்ட உணவின் தரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் மாணவர்களுக்கு போதுமான படுக்கை வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளதா? சமையலறை சுகாதாரமான முறையில் உள்ளதா? உள்ளிட்டவைகளை பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தார். கழிவறைகள் மற்றும் குளியலறையை சுகாதாரமாக வைக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தாசில்தார் அலுவலகம்

முன்னதாக நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை கலெக்டர் ஸ்ரேயா சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட சான்றிதழ்கள் குறித்த நேரத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறதா? என்பதையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது நாமக்கல் தாசில்தார் சக்திவேல், விடுதி காப்பாளர் மற்றும் மாணவர்கள் உடன் இருந்தனர்.


Next Story