பாலக்கோடுமீன் விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு


பாலக்கோடுமீன் விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 31 March 2023 7:00 PM GMT (Updated: 31 March 2023 7:00 PM GMT)
தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு மீன் மார்க்கெட்டில் உள்ள மீன் விற்பனை நிலையங்களில் காரிமங்கலம், பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், மீன்வளத்துறை சார் ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் மீன்வளத்துறை பாதுகாவலர் முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். ஆய்வில் 10-க்கும் மேற்பட்ட மீன் விற்பனை நிலையங்களில் தரமற்ற மீன்கள், ரசாயனம் கலந்த மீன்கள், பழைய கெட்டு போன மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை நடந்தது. அதில் ஒரு கடையில் தரமற்ற கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடை விற்பனையாளருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் மீன்களை ஐஸ் பெட்டிகளில் 2, 3 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்காமல் விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டது. இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் எனவும், உரிய உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று விற்பனை செய்ய கடைக்காரர்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டது. விதிமுறைகள் மீறும்பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


Next Story