ராயக்கோட்டை அருகேநான்கு வழி சாலை பணிகளை அதிகாரி ஆய்வு
ராயக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை நெடுஞ்சாலைதுறை உட்கோட்டத்திற்கு உட்பட்ட ராயக்கோட்டை- அத்திப்பள்ளி சாலையில் நல்ராலப்பள்ளி முதல் நாகமங்கலம் வரை முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2.40 கி.மீட்டர் நீளத்திற்கு இருவழி தடத்தில் இருந்து நான்கு வழிதடமாக அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. தேன்கனிக்கோட்டை- கெலமங்கலம் சாலையில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1.20 கி.மீட்டர் நீளத்திற்கு சாலை விரிவாக்கும் பணியும் நடந்து வருகிறது.
இந்த பணிகளை சேலம் தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நீளம், அகலம் மற்றும் மண்ணின் அடர்த்தி, தார்சாலையின் கனம் ஆகியவற்றை நவீன கருவி மூலம் ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது தேன்கனிக்கோட்டை உதவி கோட்ட பொறியாளர் திருமால் செல்வன், கிருஷ்ணகிரி தரக்கட்டுபாடு உதவி கோட்ட பொறியாளர் பத்மாவதி, ராயக்கோட்டை உதவி பொறியாளர் மன்னர் மன்னன், கிருஷ்ணகிரி தரக்கட்டுப்பாடு இளநிலை பொறியாளர் வெண்ணிலா மற்றும் சாலை ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.