பேளாரஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில்மூலிகை செடி தோட்டத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
தர்மபுரி
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே பேளாரஅள்ளி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் வேப்பன், புங்கன், மூங்கில், புன்னைமரம், பாதம், வில்வம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட மூலிகை செடிகளை நடவு செய்து மாணவர்கள் வளர்த்து வருகின்றனர்.
இதையறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் அங்கு சென்று மூலிகை தோட்டத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மூலிகை செடிகளை நட்டு வளர்த்து பராமரித்து வரும் மாணவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். இதில் பாலக்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சிந்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாரியப்பன், தலைமை ஆசிரியர் பாபு சுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.
=======
Related Tags :
Next Story