நாமக்கல் அருகேசாலை விரிவாக்க பணியை அதிகாரி ஆய்வு
நாமக்கல்
சென்னை- கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மோகனூர்- நாமக்கல்- சேந்தமங்கலம்- ராசிபுரம் மாநில நெடுஞ்சாலையில் முத்துகாபட்டி முதல் சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி வழியாக ராசிபுரம் வரை சாலை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை தலைமை பொறியாளர் எம்.கே.செல்வன் ஆய்வு செய்தார். அப்போது அவர் சாலையின் தரம் மற்றும் அளவுகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்ரமணியன், கோட்டப்பொறியாளர் சசிக்குமார், உதவிப்பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story