தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் வல்லுனர் குழு ஆய்வு
தர்மபுரி
தர்மபுரி டவுன் கோட்டையில் உள்ள பழமை வாய்ந்த கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் மேற்கொள்வதற்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பாலாலாயம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இந்த நிலையில் முதுநிலை நிபுணர் தட்சிணாமூர்த்தி தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை மாநில வல்லுனர் குழுவினர் கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் உள்ள சாமி விக்ரகங்கள், சன்னதிகள், பிரகாரங்கள் உள்பட அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்தனர். கோவில் மூலஸ்தானத்தை உயர்த்துவது தொடர்பாக குழுவினர் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த ஆய்வின் போது சேலம் மண்டல இணை இயக்குனர் மங்கையர்கரசி, தர்மபுரி ஆய்வாளர் சங்கர், செயல் அலுவலர் ராஜகோபால் மற்றும் அலுவலர்கள் அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள் உடன் இருந்தனர். இந்து சமய அறநிலையத்துறை மூலம் ரூ.1 கோடியே 23 லட்சம் மதிப்பில் கட்டுமான பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட உள்ளது. மேலும் கட்டளைதாரர்கள் மூலம் சுற்றுப்பிரகாரம் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.