நெல் கொள்முதல் நிலையங்களில் சோதனை


நெல் கொள்முதல் நிலையங்களில் சோதனை
x

விவசாயிகளிடம் இருந்து முறையாக கொள்முதல் செய்யப்படுகிறதா? என தஞ்சை அருகே நெல் கொள்முதல் நிலையங்களில் போலீஸ் சூப்பிரண்டு அதிரடி சோதனை மேற்கொண்டார்.

தஞ்சாவூர்
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் தற்போது முன்பட்ட குறுவை அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக ஆங்காங்கே கொள்முதல் நிலையங்களும் திறக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. தஞ்சை மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட நெல்கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சில கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாக அதிகாரிகளுக்கு அடிக்கடி புகார்கள் சென்ற வண்ணம் உள்ளன. இந்தநிலையில் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு ஏதும் நடைபெறுகிறதா?, இடைத்தரகர்கள் தொல்லை இருக்கிறதா? என சோதனை மேற்கொள்ள குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

போலீஸ் சூப்பிரண்டு சோதனை

அதன்படி, தஞ்சையை அடுத்த மருங்குளத்தில் உள்ள கொள்முதல் நிலையம் மற்றும் வேங்குராயன்குடிக்காட்டில்உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் திருச்சி மண்டல குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா சென்று சோதனை நடத்தினார். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் போலீசாா் உடன் இருந்தனர். அப்போது அவர்கள் உள்ளூர் விவசாயிகளிடமிருந்து அறுவடை செய்யப்படும் நெல் முறையாக கொள்முதல் செய்யப்படுகிறதா?, வெளிமாவட்ட நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா?, நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகளிடம் இருந்து பணம் ஏதும் பெறப்படுகிறதா?, கொள்முதல் குறித்த பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்று சோதனை மேற்கொண்டனர்.Next Story