ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஆய்வு


ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஆய்வு
x

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கோவை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஆய்வு நடத்தினார்

கோயம்புத்தூர்

ஆனைமலை

பொள்ளாச்சி, ஆனைமலை, செஞ்சேரி, கிணத்துக்கடவு, நெகமம் ஆகிய இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உள்ளது. இந்நிலையில் கோவை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தமிழ்ச்செல்வி ஆனைமலை ஒழுங்குமுறை விற்ப னை கூடத்தில் திடீரென்று ஆய்வு நடத்தினார்.

அவர், கொள் முதல் நிலையங்களில் உள்ள கொப்பரை மூட்டைகள், அதில் க்யூ ஆர் கோடு ஒட்டப்பட்டு உள்ளது ஆகியவற்றை பார்வையிட்டு பரிசோதனை செய்தார்.

இது குறித்து உதவியாளர் தமிழ்ச்செல்வி கூறியதாவது:-

ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொப்பரை கொள்முதல் செய்யப்படுவது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு அளிக் கப்பட்டு வருகிறது. விவசாயிகளிடம் இருந்து ஒரு ஏக்கருக்கு 214 கிலோ வரை கொள்முதல் செய்யப்படுகிறது

தற்போது 30 விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 493.5 குவிண்டால் கொப்பரை இருப்பு உள்ளது

இதன் மதிப்பு ரூ.52 லட்சத்து 26 ஆயிரத்து 116ஆகும். விவசாயிகள் தங்களின் ஆதார், வங்கி கணக்கு புத்தகம், சிட்டா, அடங்கல் ஆகியவற்றை கொண்டு ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பதிவு செய்து பயன் பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story