வால்பாறை போலீஸ் நிலையத்தில் துணை சூப்பிரண்டு ஆய்வு

வால்பாறை போலீஸ் நிலையத்தில் துணை சூப்பிரண்டு ஆய்வு மேற்கொண்டார்.
வால்பாறை
வால்பாறை உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் புதிதாக பொறுப்பேற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு கீர்த்திவாசன் வால்பாறை பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். வால்பாறை போலீஸ் நிலையத்துக்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கீர்த்திவாசனுக்கு வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் தலைமையில் போலீசார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.
போலீஸ் நிலையத்தை பார்வையிட்ட அவர் போலீசாருடன் கலந்துரையாடினார். அப்போது அவர் போலீசார் மீது பொது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் பணியாற்ற வேண்டும். யார் வந்து புகார் அளிக்கின்றார்களோ அவர்களிடம் நீங்கள் நடந்து கொள்ளும் முறையை பார்த்து அவர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை வரும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். எல்லோரும் இணைந்து பணியாற்றி வால்பாறை உட்கோட்ட போலீஸ் நிலையங்களை பொது மக்களுக்கு பணியாற்றும் போலீஸ் நிலையங்களாக மாற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார். மேலும் பணியிலிருந்து ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயசூரியனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.






