துணை சுகாதார நிலையத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
சிக்கல் துணை சுகாதார நிலையத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
சிக்கல்:
நாகை அருகே சிக்கல் துணை சுகாதார நிலையத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அருண்ராய் மற்றும் கலெக்டர் அருண்தம்புராஜ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் தேவையான வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் சிக்கல் ஊராட்சி ஆவராணி சாலையில் பழுதடைந்துள்ள அங்கன்வாடி மைய கட்டிட மறு சீரமைப்பு பணி, கீழக்கரையிருப்பு பகுதியில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம், பொரவச்சேரி ஊராட்சி குற்றம் பொருத்தானிருப்பு பகுதியில் உள்ள புதிய அங்கன்வாடி மையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது அங்கு பணிபுரியும் பணியாளர்களிடம் தினமும் குறித்த நேரத்திற்குள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அழைத்து வர வேண்டும்.குழந்தைகளுக்கு நல்ல தரமான உணவுகளை வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு கல்வி திறன் வளர்வதற்கு பாடங்களை கற்றுத்தர வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, நாகை உதவி கலெக்டர் பானோத் ம்ருகேந்தர் லால், மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, மாவட்ட சமூக நல அலுவலர் தமிமுன்னிசா, துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) விஜயகுமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.