52 பள்ளி வாகனங்கள் ஆய்வு


52 பள்ளி வாகனங்கள் ஆய்வு
x

வாணியம்பாடியில் 52 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்ப்டன.

திருப்பத்தூர்

வாணியம்பாடியை அடுத்த சின்னவேப்பம்பட்டு பகுதியில் உள்ள மருதர்கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி வளாகத்தில், பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன், மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கட்ராகவன், ஆம்பூர் அமர்நாத் உள்ளிட்டோர் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது மாணவர்கள் பஸ்களிலிருந்து அவசர காலத்தில் வெளியேறும் வழி, முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவிகள் முறையாக உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, பள்ளி பஸ்சில் ஏறி பயணம் செய்த அதிகாரிகள் பள்ளி வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள வேக கட்டுப்பாட்டு கருவி முறையாக வேலை செய்கிறதா என்று ஆய்வு செய்தனர்.

வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளிலிருந்து 52 வாகனங்கள் கொண்டு வரப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதில் 7 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு அந்த வாகனங்களின் அங்கீகாரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்த அதிகாரிகள், குறைகள் சரிசெய்யப்பட்ட பின்னர், அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். வாகன ஆய்வில் கலந்து கொண்ட டிரைவர்கள் அனைவருக்கும் தீ தடுப்பு கருவியை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


Next Story