கூடுதல் பொறுப்பு அதிகாரி ஆய்வு


கூடுதல் பொறுப்பு அதிகாரி ஆய்வு
x

சொரிமுத்து அய்யனார் கோவிலில் கூடுதல் பொறுப்பு அதிகாரி ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 16-ந் தேதி நடக்கிறது. இதுதொடர்பாக நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் கோவில் திருவிழாவிற்கு கூடுதல் பொறுப்பு அதிகாரியாக நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று காலையில் கூடுதல் பொறுப்பு அதிகாரி சிவகிருஷ்ணமூர்த்தி பாபநாசம் சோதனை சாவடி, சொரிமுத்து அய்யனார் கோவில் பகுதிகளில் நேரில் ஆய்வு செய்தார். அப்போது பக்தர்களிடம் கோவில் பகுதியில் அசுத்தம் செய்யாமல் பாதுகாப்பாக தங்க வேண்டும். தாமிரபரணி ஆற்றில் பாதுகாப்பான முறையில் குளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.


Next Story