விவசாய நிலங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு


விவசாய நிலங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
x

திருப்பத்தூர் அருகே விவசாய நிலங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே மாடப்பள்ளி ஊராட்சியில் வேளாண்மை- உழவர் நலத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 15 ஏக்கர் பரப்பளவில் தரிசு நிலத்தை விளை நிலமாக மாற்றி அங்கு பருத்தி, மா, துவரை பயிரிடப்பட்டுள்ளது. இந்த பயிர்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் வேளாண்மை - உழவர் நலத்துறை அரசு சிறப்பு செயலாளர் நந்தகோபால் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, வேளாண்மை இணை இயக்குனர் கண்ணகி, சப்-கலெக்டர் பானு, தோட்டக்கலை துணை இயக்குனர் தீபா, அரசு அதிகாரிகள், விவசாயிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story