தென்னந்தோப்புகளில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு


தென்னந்தோப்புகளில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 25 April 2023 12:15 AM IST (Updated: 25 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கண்டறிய தென்னந்தோப்புகளில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கண்டறிய தென்னந்தோப்புகளில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அதிகாரிகள் குழு

பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் 49 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இங்கு தென்னையை தாக்கும் பூச்சி, நோய் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து ஆய்வு செய்ய சென்னை வேளாண் துணை இயக்குனர்(பயிர் பாதுகாப்பு) சண்முகசுந்தரம், பெங்களூரு வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் இளையராஜா மற்றும் குழுவினர் வந்தனர்.

அவர்கள் நல்லூத்துக்குளி, திம்மங்குத்து, ஆத்து பொள்ளாச்சி, சுப்பேகவுண்டன் புதூர், அய்யம்பாளையம் ஆகிய பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டனர். அதில் கேரள வாடல் நோய பாதிப்பு கண்டறியப்பட்டது. இதை தடுக்கும் முறை குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.

குருத்து அழுகல்

அப்போது வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:-

நோய் பாதித்த ஓலைகள் மஞ்சள் நிறமாக மாறி மடல்கள் கருகி கீழ்நோக்கி தொங்கி மனித விழா எலும்பு போல் காட்சியளிக்கும். மேலும் ஓலை அழுகள், குருத்து அழுகல் இருக்கும். எனவே அதிகளவில் நோயால் பாதித்த மரங்களை வெட்டி அகற்ற வேண்டும். சரியான வடிகால் வசதி அமைத்து, வட்ட பாத்திகளில் மூடாக்கு போட வேண்டும். பசுந்தாள் உர விதைகளான சணப்பை, தக்கை பூண்டு விதைத்து பூக்கும் முன் உழுது விட வேண்டும். இனப்பெருக்கம் செய்யப்பட்ட கோகோகான் நுண்ணுயிர் கலவையை ஒரு மரத்திற்கு 2 லிட்டர்(8 லிட்டர் தண்ணீரில் கலந்து) என 3 மாத இடைவெளியில் ஊற்ற வேண்டும்.

விழிப்புணர்வு முகாம்

யூரியா 1¼ கிலோ, சூப்பர் 2 கிலோ, பொட்டாசியம் 3½ கிலோ, அசோக்பைரில்லம் 200 கிராம், வேப்பம் புண்ணாக்கு 5 கிலோ, டி.விரிடி 200 கிராம், பேசில்லஸ் 200 கிராம் ஆகியவற்றை ஒரு மரத்திற்கு ஒரு ஆண்டுக்கு இட வேண்டும். கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நாளை(புதன்கிழமை) மற்றும் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) வேளாண் உழவர் நலத்துறையினர், தோட்டக்கலைத்துறையினர் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் கொண்ட குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். மேலும் தென்னையை தாக்கும் பூச்சி மற்றும் நோயை கட்டுப்படுத்தும் முறை குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story