கூடுதல் பஸ் நிலையத்தில் உதவி கலெக்டர் ஆய்வு
கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் உதவி கலெக்டர் ஆய்வு நடத்தினார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஆம்னி பஸ்கள் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வதால் விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. இதையொட்டி விபத்துக்களை தவிக்கும் பொருட்டு ஆம்னி பஸ்கள் உள்ளே வந்து, பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் கூடுதல் பஸ் நிலையத்தில் தற்காலிக தினசரி சந்தை செயல்படுவதால், போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு உதவி கலெக்டர் மகாலட்சுமி, துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் ஆகியோர் தேசிய நெடுஞ்சாலை பகுதி மற்றும் கூடுதல் பஸ் நிலையத்தில் செயல்படும் தற்காலிக தினசரி சந்தை பகுதியை ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த், சப்- இன்ஸ்பெக்டர் அரிகண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.