உளுந்தூர்பேட்டை அருகே இனிப்புக்கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
உளுந்தூர்பேட்டை அருகே இனிப்புக்கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு் செய்தனா்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடி பகுதியில் இயங்கி வரும் ஒரு பிரபல இனிப்புக்கடையில் (பேக்கரி) கெட்டுபோன கேக் விற்பனை செய்யப்படுவதாக கூறி, சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோ அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி விசாரணை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டதை அடுத்து, விழுப்புரம் உணவுப் பாதுகாப்பு அலுவலர் கதிரவன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இனிப்புக்கடையில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களின் தரம் மற்றும் காலாவதி ஆகும் காலம் குறித்து அவர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து சர்ச்சைக்குரிய கேக் மாதிரிகளை சேகரித்து அதை ஆய்வுக்கு அனுப்பி வைத்தார். மேலும் அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீசையும் அதிகாரிகள் வழங்கினர். இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.