மயிலம் முருகன் கோவிலில் அமைச்சர்கள் சேகர்பாபு, செஞ்சி மஸ்தான் ஆய்வு


மயிலம் முருகன் கோவிலில் அமைச்சர்கள் சேகர்பாபு, செஞ்சி மஸ்தான் ஆய்வு
x

மயிலம் முருகன் கோவிலில் அமைச்சர்கள் சேகர்பாபு, செஞ்சி மஸ்தான் ஆய்வு மேற்கொண்டனர்.

விழுப்புரம்

மயிலம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலம் முருகன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கோவில்களில் உள்ள சாமி சிலைகளை பார்வையிட்டும், கோவில் வளாகத்தில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் கோவில் நிர்வாகத்திடம் கேட்டறிந்தனர். முன்னதாக கோவிலுக்கு வந்த அமைச்சர்களுக்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதன்பிறகு கோவிலுக்குள் சென்ற அமைச்சர்கள் சேகர்பாபு, செஞ்சி மஸ்தான் ஆகியோர் முருகனை வழிபட்டனர். அப்போது மயிலம் பொம்மபுர ஆதினம் 20-ம்பட்ட சிவஞான பாலய சுவாமிகள் கோவிலின் வடிவமைப்பு மற்றும் வரலாறு அம்சங்கள் குறித்து விளக்கினார். ஆய்வின்போது கலெக்டர் மோகன், இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், திண்டிவனம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா, மயிலம் தெற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் சேது நாதன், முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் மாசிலாமணி, மயிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன், மயிலம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். அதைத்தொடர்ந்து திண்டிவனம் திந்திணீஸ்வரர் கோவில், லட்சுமி நரசிம்மர் கோவில் உள்பட திண்டிவனம், மயிலம் பகுதி கோவில்களிலும் திருப்பணி மேற்கொள்வது தொடர்பாக அமைச்சர்கள் சேகர்பாபு, செஞ்சி மஸ்தான் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

1 More update

Next Story