பொருட்கள் இருப்பு குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆய்வு


பொருட்கள் இருப்பு குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆய்வு
x
தினத்தந்தி 20 Aug 2023 12:15 AM IST (Updated: 20 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

காலை உணவு திட்டத்துக்கான பொருட்கள் இருப்பு குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆய்வு மேற்கொண்டார்.

மயிலாடுதுறை

காலை உணவு திட்டத்துக்கான பொருட்கள் இருப்பு குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வு

மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டையில் மயிலாடுதுறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், விவசாயிகளிடமிருந்து பருத்தியினை கொள்முதல் செய்திடும் பணியினை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் மற்றும் மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆகியோர் ஆய்வு செய்து, பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளிடம் கலந்துரையாடினர்.

தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் பள்ளிக்குழந்தைகளுக்கான காலை உணவு திட்டத்திற்கான அரிசி, கோதுமை, ரவா, சேமியா ஆகியவற்றின் இருப்புக்குறித்து மயிலாடுதுறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் கிடங்கினையும் அவர்கள் கூட்டாக ஆய்வு செய்தனர்.

வளர்ச்சி செயல்பாடுகள்

பின்னர் தமிழக முதல்-அமைச்சர் வருகிற 25,26-ந் ஆகிய தினங்களில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வருகைதந்து, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் வளர்ச்சி செயல்பாடுகளை ஆய்வு செய்ய உள்ளதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நடத்தப்பட்டது.

இதில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் மற்றும் மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மண்டல இணைப்பதினாளார் தயாள விநாயக அமல்ராஜ், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் பெரியசாமி மற்றும் சரக துணைப்பதிவாளர், துணைப்பதிவாளர் (பொது வினியோக திட்டம்) மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story